Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காற்று வாங்கிய திமுக பிரச்சாரக் கூட்டம் : கரூரில் பரபரப்பு

காற்று வாங்கிய திமுக பிரச்சாரக் கூட்டம் : கரூரில் பரபரப்பு

Advertiesment
Karur
, சனி, 5 நவம்பர் 2016 (13:44 IST)
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து, அத்தொகுதியின் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து, தொகுதி பொறுப்புக்குழு தலைவரும், முன்னாள் தி.மு.க அமைச்சருமான எ.வ.வேலு தலைமையில் ஆங்காங்கே பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது.


 


இந்நிலையில்,  வாக்காளர்களை காலில் விழ வைக்கின்றார் என்று வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் என்று பல தரப்பட்ட வகையில் மாட்டுக் கொண்டு முழிக்கும் தி.மு.க வேட்பாளருக்கு சர்ச்சை மேல் சர்ச்சை தொடர்கின்றது.

நேற்று இரவு அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம், பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வெறும் காலி சேர்கள் மட்டுமே இருந்தது. சுமார் 100 பேர் கூட பங்கேற்காத அந்த கூட்டத்தில் திடீரென்று டிரான்ஸ்பார்மர் சிதறியது. இதனால் அச்சத்தில் அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர்.

மேலும் காலியாக உள்ள சேர்களை பார்த்து தி.மு.க நிர்வாகிகளின் பேச்சும் குறைந்தது. மேலும் இக்கூட்டத்தில் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுஹாசன் மருத்துவமனையில் அனுமதி: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!