Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேதி தொகுதியில் ராகுல் போட்டி இல்லை.. காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு..!

Siva
வெள்ளி, 3 மே 2024 (07:46 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் அந்த தொகுதியில் போட்டியிடவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் ரேபேலி தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில்  மூன்றாம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 20ஆம் தேதி, ஐந்தாம் கட்ட தேர்தல் மே 25ஆம் தேதியும் நடைபெற உள்ளது
 
இதில் நான்காம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் அமேதி மற்றும் ரேபேலி ஆகிய தொகுதிகளும் உண்டு என்பதும் இன்றுடன் இந்த தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அமேதி தொகுதியில்  ராகுல் காந்தி, ரேபேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ரேபேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

கரையைக் கடந்த போதும் ஒரே இடத்தில் நகராமல் நிற்கும் ஃபெஞ்சல் புயல்… வானிலை மையம் தகவல்!

2900 மோட்டார்கள் பொருத்தி வெள்ளத்தை வடிக்கும் பணிகள்… அமைச்சர் தகவல்!

புயல் கரையைக் கடந்த நிலையில் மீண்டும் தொடங்கிய சென்னை விமானப் போக்குவரத்து!

கன மழையால் 20 அடியாக உயர்ந்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்…!

அடுத்த கட்டுரையில்
Show comments