Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்..! விரைந்து இழப்பீடு வழங்க வலியுறுத்தல்..!!

Rahul Gandhi

Senthil Velan

, திங்கள், 8 ஜூலை 2024 (14:21 IST)
அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
 
அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு,நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, புலேர்டலில் உள்ள நிவாரண முகாமுக்குச் சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
 
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல், அசாம் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டுள்ள அதீத பேரழிவு மிகப் பெரிய வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அசாம் வெள்ளப் பெருக்கில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 53,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 24,00,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
 
"வெள்ளம் இல்லாத அசாம்" என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தையே இந்த எண்கள் பிரதிபலிக்கின்றன. அசாமுக்கு விரிவான மற்றும் இரக்கமுள்ள ஒரு பார்வை தேவை. சரியான நிவாரணம், மறுவாழ்வு, குறுகிய காலத்தில் இழப்பீடு மற்றும் நீண்ட காலத்துக்கு வெள்ளத்தை கட்டுப்படுத்த தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும்.

 
அசாம் மக்களுடன் நான் நிற்கிறேன். நாடாளுமன்றத்தில் நான் அவர்களின் சிப்பாயாக இருப்பேன். மாநிலத்துக்கு அனைத்து உதவிகளையும் ஆதரவையும் விரைவாக வழங்குமாறு மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு..! சிறப்பு நீதிமன்றத்துக்கு விசாரணை மாற்றம்..!!