Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பத்தி கவலை இல்ல; மோடி ஜீ மயில்களோடு பிஸியா இருக்கார்! – கலாய்த்த ராகுல் காந்தி!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (10:42 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் நிலையில் மத்திய அரசு கொரொனாவை கண்டுகொள்ளவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதலாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி ஒருநாள் பாதிப்புகள் 1 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதனால் இந்த வார இறுதிக்குள் கொரோனா பாதிப்புகள் 50 லட்சத்தை தாண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி ”இந்த வாரத்தில் கொரோனா மொத்த பாதிப்புகள் 50 லட்சத்தை எட்ட உள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 10 லட்சத்தை நெருங்கியுள்ளது. எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தனிநபர் ஈகோவால் மேற்கொண்ட நடவடிக்கைகள் மொத்த நாட்டையும் பாதித்திருக்கிறது. உங்களை நீங்கள்தான் பாதுகாத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக இருக்கிறார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

இந்தியாவில் அறிமுகமானது OPPO Find X8! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரஜினியை சந்தித்ததே அரசியல்தான்.. அரசியலுக்காகதான்! - சீமான் குடுத்த ட்விஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments