Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்செட்டில் ராகுல் காந்தி: தலைவர்களை சந்திக்க மறுப்பது ஏன்?

Webdunia
திங்கள், 27 மே 2019 (20:26 IST)
தோல்வியினால் ஏற்பட்ட அப்செட் காரணமாக ராகுல் காந்தி முக்கிய தலைவர்களுடனான் சந்திப்பையும் தவிர்த்து வருகிறாராம். 
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்றது. இதையடுத்து காங்கிரஸின் காரிய கமிட்டி கூடியது. இந்த கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார்.  
 
இதை சற்றும் எதிர்பாராத காரிய கமிட்டியினர் ராகுல் ராஜினாமா செய்யக்கூடாது என்றும், தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு அவரது ராஜினாமாவை நிராகரித்தனர்.  
 
ஆனால் தற்போது ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியில் கண்டிப்பாக நீடிக்க முடியாது வேறு நபரை தேர்வு செய்யுங்கள் என்று கூறி விட்டதாக செய்திகள் வருகிறது.  
 
ராகுல் காந்தி தலைமையில் அந்த கட்சி சந்தித்த முதல் லோக்சபா தேர்தலிலும் இதுபோன்ற மோசமான தோல்வியை சந்தித்ததால், அவர் மிகவும் அப்செட்டாக உள்ளாராம். 
 
இதனால் அவர் எந்த ஒரு காங்கிரஸ் தலைவரையும் சந்திப்பதில்லையாம். முக்கிய தலைவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளையும் அவர் எடுப்பதில்லையாம். 

தொடர்புடைய செய்திகள்

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! பதிலடி கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்!

சென்னையில் இன்று இரவு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சசிகலாவுக்கு ரீ என்ட்ரி இல்லை.! அடித்து சொல்லும் ஜெயக்குமார்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments