Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஞ்ஞானிகள் வரிசையில் “Breaking Bad” வால்டர் வொயிட்! – பஞ்சாப் பள்ளியில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (10:42 IST)
பஞ்சாப் பள்ளி ஒன்றில் பிரபல ப்ரேக்கிங் பேட் சிரிஸ் கதாப்பாத்திரம் விஞ்ஞானிகள் வரிசையில் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை ஈர்த்த வெப் சிரிஸ் “Breaking Bad”. இந்த சிரிஸில் பிரபலமான வால்டர் வொயிட் (Walter White) என்னும் கதாப்பாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் Bryan Cranston நடித்திருந்தார்.

பஞ்சாபில் உள்ள பள்ளி ஒன்றில் ஆய்வகத்தில் பிரபல விஞ்ஞானிகளின் படங்கள் ஒட்டப்பட்டு அவர்களை பற்றிய அடிக்குறிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன. அதில் விஞ்ஞானி வெர்னர் ஹெய்சன்பெர்கிற்கு பதிலாக ப்ரேக்கிங் பேட் வால்டர் வொயிட் படத்தை தவறாக அச்சிட்டுள்ளனர். ஆனால் அடிக்குறிப்பில் வெர்னர் ஹெய்சன்பெர்க் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

முன்னதாக இதுபோல ஆந்திர மாநிலத்தின் அறிவியல் பாடப்புத்தக அட்டையில் ப்ரேக்கிங் பேட் கதாப்பாத்திரம் ஒன்று இடம்பெற்றது சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments