Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மந்திரிசபை விரிவாக்கத்தில் காங்கிரசாரால் சிக்கல்: குமாரசாமி பேட்டி!

Webdunia
திங்கள், 28 மே 2018 (12:38 IST)
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்து பல குழப்பத்திற்கு பிர காங்கிரஸ் - மஜத கூட்டணி அமைத்து குமாரசாமி முதல்வராக பதவியேற்றார். அதன் பின்னர் தனது பெரும்பான்மையையும் நிரூபித்தார். 
 
இதையடுத்து, மொத்தம் உள்ள 34 மந்திரி பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 22, மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்கு 12 என்ற அளவில் பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
 
காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியும், துணை சபாநாயகர் பதவி மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் என்று முடிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், மந்திரிகள் யாரும் இன்னும் பதவி ஏற்கவில்லை. 
 
தற்போது மந்திரிசபை விரிவாக்கத்தில் பிரச்சினை எழுந்து உள்ளது என தெரிகிறது. அதாவது முக்கிய இலாகாக்களை இரண்டு கட்சிகளுமே கேட்பதால் பிரச்சினை எழுந்து உள்ளது.
 
இது குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி பின்வருமாரு பேசியுள்ளார். மந்திரிசபை விரிவாக்கம் செய்வதில் சில பிரச்சினைகள் உள்ளது. முக்கிய இலாகாக்களை காங்கிரஸ் கட்சியினர் கேட்கிறார்கள். நிதி மந்திரி பதவியையும் காங்கிரஸ் கேட்கிறது. 
 
இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. இதில் கவுரவம் பார்க்காமல் துறைகள் பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். கூடிய விரைவில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments