கர்நாடக தேர்தல் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியாகி குழப்பத்திற்கு பின்னர் குமராசாமி முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், இன்று மதியம் கர்நாடக சட்டசபையில் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை கோருகிறார். கர்நாடகவில் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. சட்டசபையின் இப்போதைய பலம் 222.
இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 ஆக உள்ளது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை.
காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இதனால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார்.
ஆனாலும், பதவி வழங்குதலில் கட்சியில் உள்ள சிலர் அதிருப்தியில் இருப்பதால், குமாரசாமி பெரும்பான்மையை நிரூப்பிப்பாரா என்ற சந்தேகமும் உள்ளது.