Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் மசோதா குறித்து விவாதிக்க தயாரா? ராகுல்காந்திக்கு சவால் விடுத்த பாஜக அமைச்சர்!

Webdunia
வெள்ளி, 25 டிசம்பர் 2020 (14:39 IST)
வேளாண் சட்டங்கள் குறித்து என்னுடன் ராகுல்காந்தி விவாதம் செய்ய தயாரா என பாஜக பிரமுகர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று சென்னை வந்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வேளாண் சட்ட மசோதாவை ஆதரித்து விளக்கப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது:
 
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கான மற்றும் கேரள விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. பஞ்சாப் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். வேளாண் சட்டம் அமலுக்கு வந்தாலும் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும். இந்த சட்டம் குறித்து விவாதம் செய்ய ராகுல் காந்தி தயாரா? என சவால் விடுக்கின்றேன்’ என்று கூறினார்
 
இதே கூட்டட்தில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் பேசியபோது, ‘வேளாண் சட்டம் குறித்து தவறான செய்திகளை திமுகவினர் மக்களிடையே தெரிவிக்கின்றனர். அவர்கள் நடத்திய கடையடைப்பு போராட்டம் பெரும் தோல்வி அடைந்தது. சட்டத்தை புரிந்து கொண்ட விவசாயிகள் வரும் தேர்தலில் திமுகவை தோற்கடிப்பார்கள் என்று கூறினார். 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments