Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் ஆணையர்களை ஜெயிலில் அடைபோம்! சொன்னது யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (08:52 IST)
தேர்தல் ஆணையம் என்பது அனைத்து கட்சிகளுக்கும் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பதாகவே எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக பகிரங்கமாகவே தேர்தல் ஆணையத்தின் மீது பல புகார்களை முன்வைத்துள்ளது
 
இந்த நிலையில் சட்டமேதை அம்பேத்கரின் பேரனும் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சியின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நடுநிலைமை இல்லாமல் இருக்கும் தேர்தல் ஆணையர்களை சிறையில் அடைப்போம் என தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.
 
பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சி, அம்பேத்கர் முன்னணி பரீப் பகுஜன் மகாசங் மற்றும் அசாதுதீன் ஓவைஸியின் ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. பிரகாஷ் அம்பேத்கர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
 
இந்த நிலையில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பிரகாஷ் அம்பேத்கர், '"புல்வாமா தாக்குதல் குறித்து பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையம் எப்படி கூறலாம்? அப்படி கூறுவதற்கு அவர்களுக்கு உரிமையே இல்லை. நாட்டில் ஏற்பட்ட ஒரு பேரிழப்பை பேசுவதற்கு சட்டப்படி எங்களுக்கு உரிமை உள்ளது. நான் பாஜகவை சேர்ந்தவன் கிடையாது. இருப்பினும் ஒருவேளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தலை ஆணையர்களை 2 நாட்களுக்கு சிறை அடைப்போம் என்று பரபரப்பாக பேசியுள்ளார். அவருடைய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments