Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய் மற்றும் மகளை கற்பழித்து வீடியோ எடுத்த வாலிபர்....

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (15:54 IST)
ஒரு விதவை பெண்ணையும் அவரது மகளையும் வீட்டில் அடைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.


 

 
உத்தரகாண்ட மாநிலத்தில் வசிக்கும் கணவனை இழந்த ஒரு பெண் (35) தன்னுடைய மகள்(15) மற்றும் மகன்(11) ஆகியோரோடு தனியாக வசித்து வந்தார்.  அவரின் மகள் ஒரு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
 
அந்த பெண்ணிற்கு அசோக்குமார்(23) என்ற வாலிபர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார்.  அவர் ஒரு சப்-இன்ஸ்பெக்ட்ரின் மகன் ஆவார். பி.ஏ.பட்டதாரியான அவர் டெல்லி கோகல்பூர் பகுதியில் வசித்து வருகிறார். அவர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில், கடந்த 3 வாரங்களாக அந்த பெண்ணையும், அவரது மகளையும் அந்த வீட்டில் அடைத்து வைத்து அவர் பாலியல் பாலத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், அதை வீடியோவாகவும் எடுத்து அவர்களை மிரட்டியுள்ளார். 
 
இதுபற்றி அந்த பெண் கொடுத்த புகாரில் அந்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரது செல்போனிலிருந்து வீடியோக்களையும் அவர்கள் கைப்பற்றினர்.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்