Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜினாமா செய்ய அவர்கள் என்ன வாழப்பாடியாரா? - செங்கோட்டையன் கிண்டல்

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (15:23 IST)
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் விவகாரத்தில், அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய மாட்டார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


 

 
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும். இல்லையெனில், மதுரையை சேர்ந்த 8 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்வோம் என திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ போஸ் சமீபத்தில் கூறியிருந்தார்.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் “ எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிடுவோம் என மிரட்டுவதெல்லாம் சும்மா. அவர்கள் அப்படியெல்லாம் ராஜினாமா செய்ய மாட்டார்கள்.  தன்னுடைய கோரிக்கை நிறைவேறவில்லை என்பதற்காக வாழப்பாடி ராமமூர்த்தி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பின் யாரும் அப்படி ராஜினாமா செய்ததில்லை” என கருத்து தெரிவித்தார்.
 
தன்னுடைய கட்சி எம்.எல்.ஏக்களை அமைச்சரே கிண்டலடித்திருப்பது மதுரை மாவட்ட எம்.எல்.ஏக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments