Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகம் முழுக்க கொரோனா போராட்டம்; ஆனா நமக்கு..!? – பிரதமர் மோடி உரை!

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (11:57 IST)
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் இந்தியா மட்டும் கொரோனாவுடன் இணைந்து வேறு பல பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததால் பொருளாதாரம் பெரும் இடர்பாடுகளை சந்தித்துள்ளது, பொருளாதார மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு துறைகளுக்குமாக 20 லட்சம் கோடி ரூபாய்க்கான கடனுதவிகளை அளித்துள்ளது. இந்நிலையில் இந்திய வர்த்தக சபையின் 95வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

அதை தொடர்ந்து பிரதமர் மோடி காணொளி வாயிலாக இந்திய வர்த்தக சபைக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது பேசிய அவர் “உலக நாடுகள் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தியா மட்டும் கொரோனா மட்டுமல்லாமல் வெட்டுக்கிளி தாக்குதல், புயல், பூகம்பம், அசாம் தீ விபத்து என பலவற்றுடன் போராடி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை நமக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும். சுயசார்பு இந்தியாவுக்கான திருப்புமுனையாக கொரோனா போராட்டத்தை மாற்றுவோம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments