Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவிற்கு அவசியம்! – பிரதமர் மோடி கருத்து!

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவிற்கு அவசியம்! – பிரதமர் மோடி கருத்து!
, வியாழன், 26 நவம்பர் 2020 (17:36 IST)
தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் பதவியேற்றுள்ள பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அமைப்பை கொண்டு வர முயற்சிப்பது குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த பயங்கரவாத கும்பல் மும்பை தாஜ் ஓட்டல் உள்ளிட்ட சில பகுதிகளில் தாக்குதல் நடத்திய கோர சம்பவத்தின் 12வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்து கொண்டு போலீஸ் அதிகாரிகளிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து பேசினார். அன்று மும்பை தாக்குதலில் உயிரிழந்த மக்கள், காவலர் உள்ளிட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், அந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியா இன்று புதிய கொள்கைகளை வகுத்து பயங்கரவாதத்தை திறம்பட எதிர்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசியுள்ள அவர் ’ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது விவாதித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம் அல்ல. அது தற்போது இந்தியாவிற்கு அவசியமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மரடோனா இழப்பிற்கு வருந்தும் கேரளா; 2 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவிப்பு!