Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்பவும் சொல்றேன், மோடி திருடர்தான்: மன்னிப்பு கேட்டும் திருந்தாத ராகுல்காந்தி!

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (21:28 IST)
மோடியை திருடர் என உச்சநீதிமன்றம் கூறியதாக தனது தேர்தல் பரப்புரையில் கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி, சுப்ரீம் கோர்ட் சொல்லாத ஒன்றை தேர்தல் பரப்புரையின்போது ஒரு வேகத்தில் கூறிவிட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்
 
இருப்பினும் இன்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் மோடி திருடர் என்பது உண்மைதான். உச்சநீதிமன்றம் தான் அவரை திருடர் என கூறவில்லை, ஆனால் நான் சொல்கிறேன், மோடி திருடர்தான்  என்று கூறினார். மேலும் 'செளகிதார்' என ராகுல்காந்தி கத்தி சொல்ல, எதிரே கூடியிருந்த மக்கள் 'திருடர்' என்று கூறியதை தொடர்ந்து 'இதோ நான் மட்டுமல்ல மக்களும் அவரை திருடர் என்று தான் கூறுகின்றனர் என்று கூறினார்.
 
மேலும் மோடிக்கு தைரியம் இருந்தால் என்னோடு நேருக்கு நேர் ஒரு பத்து நிமிடம் பேசச்சொல்லுங்கள் பார்ப்போம். அவருக்கு உகந்த நேரத்தில் அவருக்கு உகந்த இடத்தில் மக்கள் முன் வைத்து கொள்ளலாம், மோடி தயாரா? என சவால் விடுத்தார். ராகுல்காந்தியின் இன்றைய பேச்சு இதுவரை இல்லாத அளவில் மிகவும் ஆவேசமாக இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஒருசில நெட்டிசன்கள் மட்டும் மன்னிப்பு கேட்டும் ராகுல் திருந்தவில்லை என்று கமெண்ட் அடித்துள்ளனர்,

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments