Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்னை பூமியை காப்பாத்தணும்; யூரியாவை குறைச்சு போடுங்க! – பிரதமர் மோடி வேண்டுகோள்!

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (12:36 IST)
விவசாயிகளுக்கான கிசான் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடிகளுக்கான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி அளிக்கும் திட்டங்களை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பிறகு பேசிய அவர் நடப்பு ஆண்டில் வேளாண் உற்பத்தியை அதிகரித்துள்ளதாக மத்திய பிரதேச விவசாயிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் “ 8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி வழங்குவதில் மிகவும் பெருமையடைகிறேன். ஊரடங்கு காலத்தில் மட்டும் ரூ.22 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஒருமைபாட்டால் ஒரே தேசம், ஒரே சந்தை என்பது சாத்தியமாகியுள்ளது. தற்போது வேளான் பொருட்களை உற்பத்தி செய்பவர்களே அதை நேரடியாக விற்க முடியும் சூழல் உருவாகியுள்ளது” என கூறியுள்ளார்.
மேலும் விவசாயத்திற்கு உதவும் அன்னை பூமியை காக்க யூரியாவை குறைவாக உபயோகிக்க விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments