Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய கல்விக்கொள்கை ஏன்? பாய்ண்டு பாய்ண்டாய் புரிய வைக்கும் மோடி!!

புதிய கல்விக்கொள்கை ஏன்? பாய்ண்டு பாய்ண்டாய் புரிய வைக்கும் மோடி!!
, வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (12:04 IST)
புதிய கல்வி கொள்கை குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் கூறியது பின்வருமாறு... 
 
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அளவில் கல்விக்கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்த நிலையில் மத்திய அரசு மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கை முறை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. 
 
தற்போது உள்ள நடைமுறைகளிலிருந்து சிலவற்றை நீக்கியும், புதிய முறைகளை இணைத்தும் புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 
 
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் பிரதமர் மோடி. அவர் கூறியதாவது... உலகம் முழுவதும் இந்தியா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. பழைய கல்விக் கொள்கையால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. பழைய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு சுமையை அதிகரிக்கும் வகையில் இருந்தது. 
webdunia
எனவே, இந்திய கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. இளைஞர்களுக்கான வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது நமது கடமை. இதனால் வேலை வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் கல்வித்துறையில் மாற்றம் செய்ய வேண்டும்.
 
ஏற்றத் தாழ்வுகளற்ற கல்வி வழங்குவதை புதிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. உலகத்தரத்திற்கு இணையான கல்வியை நம் மாணவர்களும் பெற வேண்டும். உலகத்தரமான கல்வியை மாணவர்கள் பெற்றாலும் நமது பாரம்பரியம், கலாச்சாரத்தை மறக்க கூடாது. 
 
புதிய கல்விக் கொள்கையில் எந்தவித பாகுபாடும் கிடையாது. அனைத்து தரப்பு கருத்தையும் கேட்டபிறகே புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் வருத்தமடைந்துள்ளனர்.
 
தாய்மொழியிலேயே கல்வி கற்பது மூலம் மாணவர்கள் சிறப்பாக கற்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கல்விக் கொள்கை மாற்றத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதற்கு தயாராக வேண்டும். நல்ல குடிமக்களை உருவாக்கும் முயற்சி வெற்றி பெற வேண்டுமானால், மாணவர்கள் சமூக சூழ்நிலையோடு ஒன்றி கல்வி கற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமலர் நாளிதழுக்கு முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கண்டனம்