Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட முடியாத புதிய நோட்டுகள்..

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட முடியாத புதிய நோட்டுகள்..

Advertiesment
பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட முடியாத புதிய நோட்டுகள்..
, வியாழன், 10 நவம்பர் 2016 (15:06 IST)
தற்போது இந்திய அரசாங்கம் சார்பில் புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளை பாகிஸ்தான் நாட்டில் கள்ள நோட்டாக அச்சடிக்க முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 

 
இந்தியாவின் பொருளாதார வளர்சியை சீர்குலைக்க, இந்திய ரூபாய் நோட்டுகளை, பாகிஸ்தான் தனது நாட்டில் அச்சடித்து, அதை கள்ள நோட்டாக இந்தியாவிற்குள் புழக்கத்தில் விட்டு வந்தது.
 
இதற்காக பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் ஒரு தொழிற்சாலையே இயங்கி வருகிறது. அங்கு, பாகிஸ்தானின் உள்ள அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் மேற் பார்வையில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, நிழல் உலக தாதா தாவுத் இப்ராகீம், லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்களின் நெட்வொர்க் மூலம் ஆண்டுக்கு ரூ.70 கோடிக்கும் மேல் இந்தியாவுக்குள்  புழக்கத்தில் விட்டு, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது.
 
முக்கியமாக அதில் பெரும்பாலான நோட்டுகள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்தான். எனவே, அதற்கு முற்றுப்புள்ளை வைக்க முடிவு செய்த மத்திய அரசு, அதிக கவனத்தோடு, ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் தற்போது புதிய நோட்டுகளை அச்சடித்துள்ளது.
 
இந்திய உளவுத்துறை அமைப்பான ரா உளவுப்பிரிவு, உளவுத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் கடந்த 6 மாதங்களாக இந்த  புதிய ரூபாய் நோட்டுகளை மிக கவனத்துடன் வடிவமைத்துள்ளனராம். எனவே, பாகிஸ்தான் மட்டுமல்ல, மற்ற யாரும் போலியாக அந்த நோட்டுகளை அச்சடிக்க முடியாது என்ற தகவல் வெளியே கசிந்திருக்கிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படுக்கைக்கு அழைத்த உதவி இயக்குனருக்கு பளார் விட்ட நடிகை- வீடியோ