மேற்குவங்க தேர்தல் முடிந்தவுடன் எனது அடுத்த குறி மத்திய அரசை கைப்பற்றுவது தான் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டே மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் கொல்கத்தாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய போது மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பின், எங்களின் அடுத்த குறி மத்தியில் ஆட்சி அமைப்பது தான் என்று கூறினார்
ஹெலிகாப்டர்களில் பண மூட்டைகளுடன் மேற்குவங்கத்தில் வந்து இறங்கி வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டுகளை திருடிச் செல்ல பாஜக தலைவர்கள் முயற்சிக்கின்றார்கள் என்றும் ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் அது நடக்காது என்றும் அவர் கூறினார்
புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு எங்களுக்கு உதவவில்லை என்றும் மாநில அரசின் நிதியிலிருந்து புயல் நிவாரண பணிகளை செய்தோம் என்றும் மக்களுக்காக பணியாற்ற நாங்கள் இருக்கிறோம் என்று மம்தா பானர்ஜி மேலும் தெரிவித்தார்