செல்போன் வெடித்தது உண்மையா? ஒன்பிளஸ் நிறுவனம் மறுப்பு
ஒன் பிளஸ் நார்டு2 செல்போன் வெடித்ததாக ஒரு சில தகவல்கள் வெளியான நிலையில் அந்த தகவல் முற்றிலும் பொய்யானது என ஒன் பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது
பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தந்தைக்கு ஒன் பிளஸ் நார்டு2 செல்போன் வாங்கிக் கொடுத்ததாகவும் அந்த போன் வெடித்ததாகவும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்
அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு ஒன் பிளஸ் நார்டு2 செல்போனை வாங்கிக் கொடுத்ததாகவும் அந்த செல்போனும் வெடித்ததாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஒன் பிளஸ் நிறுவனம் இது குறித்து விசாரணை செய்ததில் இருவருமே கூறியது பொய்யான தகவல் என்றும் ஒன் பிளஸ் நார்டு2 செல்போன் வெடிக்கவில்லை என்று உறுதி செய்யப்பட்டதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்து உள்ளது. இதன் மூலம் இருவரும் கூறியது பொய்யா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது