மகாராஷ்ட்ராவில் ஒரு செம்மறி ஆட்டுக்கு 70 லட்சம் வரை தருவதாக வியாபாரி பேரம் பேசியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டம் மத்கியால் கிராமத்தில் உள்ள செம்மறியாடுகள் அதிகம்புகழ்பெற்றவை. அவற்றை பெருக்குவதற்காக இப்போது அம்மாநில கால்நடைத் துறை பல திட்டங்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள மத்கியால் கிராமத்தைச் சேர்ந்த பாபு மெட்காரி என்ற விவசாயி வளர்த்து வரும் செம்மறியாட்டை வியாபாரி ஒருவர் 70 லட்சத்துக்கு விலை கேட்டுள்ளார்.
ஆனால் அது அதிர்ஷ்டமான ஆடு என்பதால் பாபு 1.5 கோடி விலை சொல்ல வியாபாரி வாங்காமல் சென்றுள்ளார். பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்துக்காக அந்த ஊர் வழியே சென்றதால் அந்த ஆட்டுக்கு மோடி எனப் பெயர் வைத்துள்ளார் பாபு. தன்னிடம் 200க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தாலும் அந்த ஆடு தனக்கு மிகவும் பிடித்தது எனக் கூறியுள்ளார்.