Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அக்டோபர் 25ஆம் தேதி தீர்ப்பு

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (15:11 IST)
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் வரும் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் ரூ.1,76,000 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தனிக்கை குழு குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டால் நாடு முழுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகாலமாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. ஆனால் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது இந்த வழக்கில் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
 
மேலும், 25ஆம் தேதியிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments