சாரண சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எச்.ராஜா 46 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார்.
தமிழ்நாடு சாரண சாரணியர் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தது. தற்போது நடைபெற்ற தேர்தல் முதல் இனி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற உள்ளது. இதில் சாரண சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கு பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா போட்டியிட்டார்.
ஆனால் எச்.ராஜா இந்த தேர்தலில் போட்டியிட கூடாது என பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தேர்தலில் அரசியல் தலைவர் போட்டியிடுவதால் அந்த அமைப்பில் அரசியல் தலையீடு இருக்கும் என கூறிவந்தனர். இந்நிலையில் சாரண சாரணியர் இயக்கத் தலைவராக மணி வெற்றிப்பெற்றுள்ளார்.
234 வாக்குகள் வித்தியாசத்தில் மணி வெற்றிப்பெற்றுள்ளார். வெறும் 46 வாக்குகள் பெற்று எச்.ராஜா படுதோல்வி அடைந்துள்ளார்.