'இ.வி.எம் .சிப்' இல்லாத பழைய டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் இனி முதல் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இதுவரை மேக்னடிக் டெபிட் கார்டுகள் உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. இந்த கார்டுகளுக்குப் பதிலாக இ.வி.எம். சிப் கார்டுகளை உபயோகப்படுத்த சொல்லி ரிசவ் வங்கி அந்தந்த வங்கிகளுக்கு ஆணியிட்டது. அதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது. அதையடுத்து ஜனவரி 1 , 2019 முதல் பழைய மேக்னடிக் கார்டுகள் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த இ.விஎம். சிப் கார்டு என்பது யுரோ, மாஸ்டர்கார்டு அன்ட் விசா சிப் என்பதன் சுருக்கமாகும்.
பழைய மேக்னடிக் கார்டுகளை பயன்படுத்தி எளிதாக மோசடி செயல்களில் ஈடுபட முடியும் என்பதால், அதற்குப் பதிலாக இவிஎம் சிப் பொருத்தப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சென்ற ஆண்டு உத்தரவிட்டது. வங்கிகளும் பலமுறை இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பினர். ஆனால் அந்த எச்சரிக்கையைக் கண்டுகொள்ளாமல் வாடிக்கையாளர்கள் பலர் இன்னும் பழையக் கார்டுகளை மாற்றாமல் வைத்துள்ளனர்.
அவர்களின் கார்டுகள் இனி வேலை செய்யாது. அவற்றைப் பயன்படுத்தி இனி ஏடிஎம் மில் பணம் எடுப்பது மற்றும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது போன்ற எந்த பரிவர்த்தனையிலும் ஈடுபட முடியாது. பழையக் கார்டுகளை வங்கிகளில் ஒப்படைத்து விட்டு புதுக் கார்டுகளை எந்த விதக் கட்டணமும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம் என வங்கிகள் அறிவித்துள்ளன.