Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெயிலின் தாக்கம் எதிரொலி: பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (10:17 IST)
வெயிலின் தாக்கம் எதிரொலியாக ஒடிசா அரசு பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையை அறிவித்துள்ளது. 
 
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக ஒடிசா மாநில பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து தான் கோடை விடுமுறை விடப்படும் நிலையில் ஒரிசா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒடிசா மாநிலத்தை தொடர்ந்து வேறு சில மாநிலங்களிலும் கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாப்பாடும் தரல.. சம்பளமும் தரல! கேட்டால் கொலை மிரட்டல்! - த.வெ.க நிர்வாகிகள் மீது ஓட்டுனர்கள் பரபரப்பு புகார்!

ஓடும் ரயில் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு: அதிர்ச்சியில் பயணிகள்.. ஒடிசாவில் பதட்டம்..!|

கலிஃபோர்னியா மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி.. டிரம்புக்கு கடும் சவால்..!

விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு பிரதமர் மோதியை அழைத்தது ஏன்? தலைமை நீதிபதி சந்திரசூட் பதில்

மத்தியில் இருந்து வந்தாலும்.. லோக்கல்ல இருந்து வந்தாலும்.. வெற்றி எங்களுக்குதான்! - யாரை சொல்கிறார் உதயநிதி?

அடுத்த கட்டுரையில்
Show comments