Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுதலாக சாம்பார் கேட்டதால் மாணவன் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய சத்துணவு ஊழியர்

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (14:54 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளியில் கூடுதலாக சாம்பார் கேட்டதற்காக சமையல்கார பெண் ஒருவர் சிறுவன் முகத்தில் கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஏழைகளின் பிள்ளைகள் வறுமையின் காரணமாக அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். ஆனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யவும், ஆசிரியர்களின் தனிப்பட்ட வேலைகளை செய்ய சொல்லியும் ஆசிரியர்கள் பலர் நிர்பந்திக்கும் அவல சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் ஷாப்பூர் லுத்ரா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுவன் ஒருவன் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட சென்றுள்ளான். சிறுவன் சமையல்கார பெண்ணிடம் இரண்டாவது முறையாக சாம்பார் வேண்டும் என கேட்டுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த சமையல்கார பெண் சிறுவன் முகத்தில் கொதிக்கும் சாம்பாரை ஊற்றியுள்ளார்.
 
இதனால் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் சமையல் கார பெண்ணை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் என்றும் பாராமல் கொடிய செயலை செய்த அப்பெண்ணிற்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும் என சிறுவனின் பெற்றோரும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments