Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் மின் தட்டுப்பாடு வராது: மத்திய அமைச்சர் உறுதி!

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (14:01 IST)
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு இருப்பதால் பல மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களான ராஜஸ்தான் உத்தரபிரதேசம் டெல்லி ஆகிய மாநிலங்களில் மின் தட்டுப்பாடு வரும் என்றும் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் அதன் பின்னர் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டால் கண்டிப்பாக தமிழகத்தில் மின்தடை ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் மத்திய மின்சார துறை அமைச்சர் ஆர் கே சிங் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பு உள்ளது என்றும் அதனால் நாட்டில் எந்த மாநிலத்தில் மின் தட்டுப்பாடு வராது என்றும் நிலக்கரி பற்றாக்குறை என்பது இதுவரை இல்லை என்றும் இனியும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி இந்தியாவின் பல மாநிலங்களில் விரைவில் மின் தட்டுப்பாடு வரும் என்று கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments