Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.! கந்து வட்டி கடன் செயலிகள் கண்காணிப்பு.! சக்திகாந்த தாஸ்...

Sakthikandha Das

Senthil Velan

, வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (12:15 IST)
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்,  குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே நீடிக்கும் என்றார். 2023 பிப்ரவரி முதல் தற்போது வரை 9ஆவது முறையாக கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன்களின் வட்டி உயராது என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் அமெரிக்க பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழல், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் ஆகியவற்றையும் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார்.

அதேபோல் கந்து வட்டிக்கு கடன் வழங்கும் செயலிகளையும் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 4.8 சதவீதமாக நிலையாக இருந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.  

 
2024-25க்கான உண்மையான GDP வளர்ச்சி 7.2% ஆகவும், Q1 இல் 7.1% ஆகவும், Q2 இல் 7.2% ஆகவும், Q3 இல் 7.3% ஆகவும், Q4 இல் 7.2% ஆகவும் இருக்கும் என்றும் 2025-26 ஆம் ஆண்டின் Q1 க்கான உண்மையான GDP வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈஷா மண் காப்போம் சார்பில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா! கோவையில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறுகிறது!