Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது கொரோனா 3வது அலை, 4 ஆம் அலைக்கு வாய்ப்பே இல்லை!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (12:02 IST)
இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை பரவல் முடிவுக்கு வந்துவிட்டதை உறுதியுடன் கூறலாம் என்று மூத்த மருத்துவ நிபுணர் தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 4,575 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,29,75,883 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை பரவல் முடிவுக்கு வந்துவிட்டதை உறுதியுடன் கூறலாம் என்று மூத்த மருத்துவ நிபுணரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவருமான ஜேக்கப் ஜான் கூறியுள்ளார். மேலும் நாட்டில் கொரோனா 4 ஆம் அலை ஏற்படாது என்பதை உறுதியாக நம்பலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக 4 ஆம் அலை வருகிற ஜூன் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments