Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு: நாளை பதவியேற்பு!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (15:35 IST)
நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதல்வராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெற்றது என்பதும் அந்தக் கூட்டணி 125 தொகுதிகளில் வென்றது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் பீகாரின் அடுத்த முதல்வர் நிதிஷ்குமார் தான் என ஏற்கனவே பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால், முதல்வர் பதவியை தான் கோரவில்லை என்றும் நிதிஷ்குமார் ஏற்கனவே கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்று பாட்னாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவில் நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதல்வராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments