Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடு, மாடுகளை பேச வைக்கும் மென்பொருள்: நித்தியானந்தா தகவல்

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (19:28 IST)
மனிதர்களை போலவே ஆடு, மாடுகளை மட்டுமின்றி சிங்கம், புலி முதல் குரங்கு  வரை அனைத்து மிருகங்களையும் தன்னால் பேச வைக்க முடியும் என்றும் இதற்கென தான் ஒரு மென்பொருள் உருவாக்கியுள்ளதாகவும் நித்தியானந்தா கூறியுள்ளார்.

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பிடதி என்ற பகுதியில் உள்ள ஆசிரமம் ஒன்றில் நித்தியானந்தா உரையாடினார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் 'மிருகங்களை பேச வைக்கும் மென்பொருள் ஒன்றை உருவாக்கி அதனை சோதனை முறையில் வெற்றி பெற செய்துள்ளதாகவும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் குரல் வளத்தில் உள்ள ஒருசில வேறுபாடுகளை சரிசெய்துவிட்டால் விலங்குகளை மனிதர்கள் போல் தன்னால் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் பேச வைக்க முடியும் என்றும் நித்தியானந்தா கூறியுள்ளார். இன்னும் ஒரு ஆண்டுக்குள் இதனை செய்து முடிக்க தான் திட்டமிட்டுள்ளதாகவும் நித்தியானந்தா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments