எனக்கு பிரதமர் உள்பட எந்த பதவியின் மீது ஆசை இல்லை என பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் மல்லிகாஜூனே கார்கே பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய போது அதற்கு நிதிஷ்குமார் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது
மேலும் அவர் தன்னை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்பியதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இது குறித்து நிதீஷ் குமார் பேட்டி அளித்தபோது இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கார்கேவை பரிந்துரை செய்ததில் எனக்கு எந்த ஏமாற்றமும் மனவருத்தமோ இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் எனக்கு பிரதமர் உள்பட எந்த பதவியின் மீதும் ஆசை இல்லை என்றும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்காக தொகுதி பங்கீடு விரைவாக முடிவு செய்யப்படும் என்றும் பாஜகவுக்கு எதிராக ஒன்றாக போராடுவோம் என்றும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து அடுத்த கூட்டத்தில் ஒருமனதாக பிரதமர் வேட்பாளராக மல்லிகாஜூனே கார்கே தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.