இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ததை அடுத்து பங்குசந்தை புள்ளிகள் சரசரவென உயர்ந்துள்ளன.
இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் பட்ஜெட் அறிக்கையை சமர்பித்தார் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில் பல்வேறு சலுகைகளை அறிவித்த அவர், சுய தொழில் முன்னேற்றத்திற்கும், அன்னிய முதலீட்டுக்கும், உள்நாட்டு வருவாயை மேம்படுத்தவும் பல திட்டங்களை அறிவித்துள்ளார்.
இதனால் இன்று பங்குசந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் கிடுகிடுவென உயர்ந்து 40000 வரை சென்றுள்ளது. நிப்டி புள்ளிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.