Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறை பணியில் சேருவோருக்கு ஒரு மாத சம்பளம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு!

Mahendran
செவ்வாய், 23 ஜூலை 2024 (12:23 IST)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் சற்றுமுன் முதல் முறையாக பணியில் சேர்வோருக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார் 
முறைசார் துறைகளில் முதல் முறை பணிக்கு சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளம் மத்திய அரசால் வழங்கப்படும் என்றும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்ச ரூபாய் வரை மாத சம்பளம் பெறும் இளைஞர்களுக்கு மூன்று தவணைகளாக சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இதன் மூலம் 2.1 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள் என்றும் தொழிலாளர் வைப்பு நிதி பதிவேட்டின் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 
இந்த அறிவிப்பு முதல் முறையாக வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு ஊக்குவிக்க வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்புக்கு இளைஞர்கள் மத்தியில் பேரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

அடுத்த கட்டுரையில்
Show comments