Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் ஒரு வருடமாக வேடிக்கை பார்த்தது கர்நாடக அரசு தான்: நிர்மலா சீதாராமன்

Siva
ஞாயிறு, 5 மே 2024 (13:21 IST)
பிரஜ்வல் ரேவண்ணா  விவகாரத்தில் ஒரு வருடமாக கர்நாடக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

 ஜேடிஎஸ் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா  300 பெண்களை நாசமாக்கி 3000க்கும் அதிகமான ஆபாச வீடியோக்களை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா  பாஜகவின் கூட்டணி வேட்பாளர் என்பதால் காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து கூறிய போது பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம் குறித்து கர்நாடக மாநில அமைச்சர்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றும் ஜாதி ஓட்டுகள் முக்கியம் என்பதால்தான் காங்கிரஸ் அரசு ஒரு வருடமாக அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது என்றும் தற்போது பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சேர்ந்ததால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கு முன்பே நடந்த இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள்.. அமெரிக்காவில் இருந்து கிளம்பும் 2வது விமானம்..!

பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்.. என்னுடைய சிறந்த நண்பர்.. டிரம்ப் புகழாரம்..!

சென்னையில் தேவா இசை நிகழ்ச்சி: அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்..!

மும்பை தாக்குதல் குற்றவாளி இந்தியாவிடம் ஒப்படைப்பு.. அமெரிக்க அரசு ஒப்புதல்..!

இந்தியா விதிக்கும் வரி, இந்தியா மீதே பாயும்: மோடியை சந்திக்கும் முன் டிரம்ப் கருத்து

அடுத்த கட்டுரையில்
Show comments