ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண் மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளித்ததை அடுத்து எஃப்.ஐ.ஆரில் கூடுதல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு தணிக்கை குழு வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இன்று மாஜிஸ்திரேட் முன்பு பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்தார். இதன் அடிப்படையில் பாலியல் வன்புணர்வுக்கான சட்டப்பிரிவும் எஃப்.ஐ.ஆரில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் பாலியல் வீடியோ விவகாரம் வெளியானவுடன் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி தப்பி சென்றுவிட்ட நிலையில் அவரை இந்தியா வரவழைக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா விசாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் மத்திய அரசு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்