Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.5,000 மேல் டெபாஸிட் செய்ய புதிய கெடுபிடி!!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (10:26 IST)
இனி ரூ.5,000-த்திற்கு மேலான தொகைக்கான பழைய நோட்டுகள் டெபாசிட்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.


 
 
பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு இம்மாதம் 30-ம் தேதி காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், கெடு காலம் முடிவடைய 10 நாள்களே உள்ள நிலையில் வங்கிக் கணக்கில் ரூ.5,000 மேல் டெபாசிட் செய்ய முடியாது என்ற புதிய உத்தரவை ஆர்பிஐ பிறப்பித்துள்ளது.
 
வங்கிக் கணக்கில் ரூ.5000-த்திற்கும் மேலாக டெபாசிட் செய்வது ஒருமுறை டெபாசிட்டாக இருப்பது அவசியம். மேலும், வங்கியின் இரண்டு அதிகாரிகளிடத்தில் திருப்திகரமான விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் சரியாக இல்லையெனில் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
 
அரசிடம் வருமானத்தை தாங்களாகவே தெரிவிக்கும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனாவின் கீழ் டெபாசிட் செய்யப்படும் தொகைகளுக்கு இந்தக் கட்டுப்பாடு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments