Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுலை பார்த்ததும் கண் திறந்து புன்னகைத்த கருணாநிதி!

ராகுலை பார்த்ததும் கண் திறந்து புன்னகைத்த கருணாநிதி!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (10:25 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு மீண்டும் உடல் நலக்குறைவால் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் காவேரி மருத்துவமனை வந்தவண்னம் உள்ளனர்.


 
 
இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க காவேரி மருத்துவமனை வந்தார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதியை நேரில் சென்று பார்த்தார்.
 
அப்போது நான் சோனியா காந்தியின் மகன் ராகுல்காந்தி வந்திருக்கிறேன் என்று ராகுல் சொன்னதும் கண்விழித்துப் பார்த்து, மெதுவாகக் கண்களை அசைத்து புன்னகைத்துள்ளார் கருணாநிதி. இதைக் கண்டதும் அங்கிருந்த மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் வியந்தனர்.
 
அதன் பின்னர் ராகுல் காந்தி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு சென்றார். இதற்கு முன்னர் ராகுல் காந்தி கருணாநிதியை சந்திப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வந்தது. சமீபத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் பார்க்க வந்த ராகுல் காந்தி கருணாநிதியை சந்திக்காமல் டெல்லி கிளம்பி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments