Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வின் புதிய தேர்வு தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (09:33 IST)
இதுவரை தபால் துறை தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட்டு வந்த நிலையில் திடீரென இந்த ஆண்டு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தபால்துறை தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து ஜூலை 14-ஆம் தேதி நடைபெற்ற தபால் துறை தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. மத்திய அரசின் இந்த போக்கிற்கு திமுக உள்பட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் 
 
திமுகவின் 37 எம்பிக்களும், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களும் மத்திய அரசின் இந்த போக்கிற்கு எதிராக கடுமையாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். இதனை அடுத்து ஜூலை 14-ஆம் தேதி நடைபெற்ற தபால் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் இந்தத் தேர்வுக்கு பதிலாக புதிய தேர்வு நடத்தப்படும் என்றும் அந்தத் தேர்வு தமிழ் உள்பட அனைத்து பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார் 
 
இதனை அடுத்து ஜூலை 14-ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பதிலாக புதிய தேர்வு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது என்றும் இந்த தேர்வு நாடு முழுவதும் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும் என்றும் தபால் துறை அறிவித்துள்ளது இந்த அறிவிப்பு தபால் துறை தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments