கன்சர்வேட்டி கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரிட்டன் பிரதமராக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டன் பிரதமராக இருந்த தெரசா மே சமீபத்தில் அப்பதவியை ரானின்பாமா செய்யவுள்ளதாக அறிவித்தார். அதன்பின்னர் பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்ததை அடுத்து, பிரிட்டன் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பிரதமர் பதவிக்கான போட்டியில் கன்சேர்வேட்டிவ் கட்சியின் சார்பாக ஜான்சன் மற்றும் ஜெரமி ஹண்ட் ஆகியோர் இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, இருவருக்கும் இடையே வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற கன்சேன்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து தற்போது பிரதமராக உள்ள தெரசா மே நாளை தன் பதவியக் ரானிமானா செய்யவுள்ளார்.