Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயர் மாற்றமா? மருத்துவ பேராசிரியர்கள் எதிர்ப்பு!

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (12:53 IST)
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயரை மாற்ற முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் இதற்கு மருத்துவ பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
 
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய பெயர் வைக்க மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில் மருத்துவ ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சருக்கு மருத்துவ பேராசிரியர் சங்கம் கடிதம் எழுதி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
பிரபலமான நிறுவனங்கள் பல நூற்றாண்டுகளாகவே ஒரே பெற்றுக்கொண்டு தான் இயங்கி வருகின்றன என்றும் அதே போல் பல ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனையை என்ற பெயரில் இயங்கி வரும் மருத்துவமனைக்கு புதிய பெயர் வைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் புதிய பெயர் வைத்தால் எய்ம்ஸ் என்ற அடையாளத்தை இழக்க நேரிடும் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை பெயரை மாற்றுவதற்கான எந்த ஒரு திட்டத்தையும் தயவுசெய்து பரிசீலனை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் மருத்துவ பேராசிரியர்கள் சங்கம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுக்கு புரோட்டாவுக்கு இப்படி ஒரு புகழா? உலக அளவில் சிறந்த உணவாக தேர்வு..!

மது ஒழிப்புக்கு போராடியவர்.. குமரி அனந்தன் மறைவு குறித்து விஜய்.. முதல்வரின் முக்கிய அறிவிப்பு..!

டிரம்ப் வரிவிதிப்பு அறிவிப்பால் இந்திய பங்குச்சந்தைக்கு பாதிப்பா? நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

வாங்க நாம ரெண்டு பேரும் சேர்ந்து அமெரிக்காவை எதிர்க்கலாம்.. இந்தியாவுக்கு சீனா அழைப்பு..!

டிரம்புக்கே தண்ணி காட்டும் தங்கம் விலை.. இன்று மீண்டும் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments