Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 1000 ரூபாய் நோட்டுகளா? – உண்மை நிலவரம் என்ன?

Webdunia
புதன், 16 அக்டோபர் 2019 (12:19 IST)
புதிய 2000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 1000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்க இருப்பதாக வெளியான தகவல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகல் இந்த ஆண்டில் அச்சடிக்கப்படவில்லை என தகவல் அறியும்உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட விவரத்திற்கு பதில் சொல்லியிருந்தது. இதனால் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என விரைவில் அறிவிக்க போவதாக வாட்ஸப்பில் புரளி செய்தி ஒன்று உலா வந்தது.

அதேபோல தற்போது அடுத்த ஆண்டு முதல் 1000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்க உள்ளதாகவும் அதனால்தான் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாகவும் மற்றொரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என புரளி ஏற்பட்டபோது பதில் அளித்த ரிசர்வ் வங்கி, அந்த செய்தி பொய்யானது என்றும் தேவையான அளவு 2000 ரூபாய் நோட்டுகள் கையிறுப்பு இருப்பதாலும், ஆன்லைன் பண பரிவர்த்தனையை அதிகரிக்கவுமே நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்தது. மேலும் இது தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் புதிய 1000 ரூபாய் நோட்டு அச்சடிக்கபோவதாக வெளியான தகவல் குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. மேலும் அப்படி புதியதாக 1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டாலும் கூட 2000 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்றே அரசு வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments