”ஜெயலலிதாவும் 40 திருடர்களும்”.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சீமான்

Arun Prasath
புதன், 16 அக்டோபர் 2019 (11:43 IST)
ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் சர்ச்சையாக பேசியதை தொடர்ந்து, தற்போது அதிமுக அமைச்சர்கள் குறித்தும், சர்ச்சையாக பேசியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை குறித்து சர்ச்சையாக பேசிய சீமான் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்ககூடியதாக பேசுதல், வன்முறையை தூண்டும்  வகையில் பேசுதல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க சீமானை நேரில் ஆஜராகும்படி, முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராக தூத்துக்குடி வந்த சீமான், நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ”அலிபாபாவும் 40 திருடர்களும் போல, அம்மாவும் 40 திருடர்களும் என்பது போல் தமிழக அமைச்சர்கள் உள்ளனர்” என அதிமுக அமைச்சர்கள் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார். மேலும். “தற்போது அம்மா இல்லை, 40 திருடர்கள் மட்டுமே உள்ளனர்” எனவும் கூறியுள்ளார்.

எப்போதும் தமிழக அமைச்சர்களை குறித்து விமர்சித்து வரும் சீமான், தற்போது அவர்களை திருடர்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தீர்ப்பு!.. 9 பேரும் குற்றவாளிகள்!...

சிவகார்த்திகேயனுக்கு சனி பிடிச்சிடுச்சி!.. அடுத்த சர்ச்சையை கிளப்பிய நாஞ்சில் சம்பத் கலாய்!...

நம்மகிட்ட 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இருக்கு!.. மோடி தகவல்..

சீட் பத்தாது!.. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை புறக்கணித்த ஜிகே வாசன்!..

ஒரு மணி நேரத்தில் 12 லட்சம் கோடி இழப்பு!.. இந்திய பங்குச்சந்தையில் சரிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments