Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபிநந்தன் எந்த ஜாதி! இணையத்தில் தேடிய 10 லட்சம் பேர்

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (07:59 IST)
தாய் நாட்டை காப்பதற்காக விமானப்படையில் பணிபுரிந்து எதிரி நாட்டிடம் சிக்கி, தன் உயிரையும் பணயம் வைத்து இந்தியாவின் ரகசியத்தை சற்றும் வெளிப்படுத்தாமல் தைரியமாக பாகிஸ்தான் அதிகாரிகளின் விசாரணையை எதிர்கொண்ட  வான் வீரர் அபிநந்தனுக்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இன்னொரு பக்கம் அபிநந்தன் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பதை அறிந்துகொள்ள ஒரு பிரிவினர் கூகுளில் தேடி வருகின்றார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளது. அதிலும் ஒருவர், இருவர் அல்ல சுமார் 10 லட்சம் பேர் கூகுளில் அபிநந்தன் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பதை தேடியுள்ளனர்.

இந்த தேடல் இந்தியாவின் பல இடங்களில் இருந்தும் தேடப்பட்டுள்ளதாகவும் வழக்கம்போல் இந்த தேடலுக்கு பல்வேறு பதில்களை கூகுள் தந்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜாதி மட்டுமின்றி அபிநந்தனின் சொந்த பிறந்த ஊர், அவருடைய பெற்றோர் மற்றும் அவர் படித்த பள்ளி - கல்லூரி குறித்த விவரங்களையும் நெட்டிசன்கள் இணையம் மூலம் கண்டுபிடித்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments