Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்கத்து வீட்டு சிறுமியை கற்பழித்த 25 வயது வாலிபர்: 7 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

பக்கத்து வீட்டு சிறுமியை கற்பழித்த 25 வயது வாலிபர்: 7 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (11:29 IST)
மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு அருகில் உள்ள 25 வயது வாலிபனால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் அந்த வாலிபனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 
 
கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டுக்கு வெளியே விளையாட சென்றார். அதன் பிறகு வெகுநேரமாகியும் அந்த சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
 
இதனையடுத்து சிறுமியை காணவில்லை என காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 25 வயது வாலிபர் சிறுமியை நாலச்சோப்ரா என்னும் இடத்துக்கு கடத்தி சென்றிருந்தது தெரியவந்தது.
 
பின்னர் போலீசார் அந்த இடத்துக்கு சென்று சிறுமியை மீட்டனர். அதன் பின்னர் விசாரணையில் சிறுமியை அந்த வாலிபர் கற்பழித்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
 
இந்த வழக்கின் விசாரணை  தற்போது நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அந்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ஐம்பது ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்