Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது? சுப்ரீம் கோர்ட் கையில் தான் இருக்குது..!

Siva
வியாழன், 18 ஜூலை 2024 (11:34 IST)
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்னும் கலந்தாய்வு நடைபெறாத நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பொறுத்து கலந்தாய்வு நடைபெறும் தேதி முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

எம்பிபிஎஸ்  படிப்புக்கு நீட் தேர்வு நடந்த நிலையில் அதன் முடிவு ஜூன் நான்காம் தேதி வெளியானது . ஆனால் இந்த தேர்வில் வினாத்தாள் கசிந்தது, கருணை மதிப்பெண் வழங்கியது, பல முறைகேடுகள் செய்தது என பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் தற்போது இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் நிலையில் இன்றைய விசாரணைக்கு பிறகு சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவை பொருத்தே தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் எம்பிபிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வு தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலந்தாய்வுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தால் அனேகமாக அடுத்த வாரம் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிய நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு இன்னும் கலந்தாய்வு தேதி அறிவிக்காமல் இருப்பது மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் இது குறித்து உத்தரவை பிறப்பிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டு எண்ணமும் காங்கிரஸ் எண்ணமும் ஒன்று தான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

ஓணம் பண்டிகை: கேரளாவில் 12 நாட்களில் 818 கோடி ரூபாய்க்கு மது விற்பனை..!

உதயநிதி பதவி ஏற்கும் நாள் முகூர்த்த நாளாக இருக்கும்.! தமிழிசை விமர்சனம்..!!

10 நாட்களுக்குள் துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி..! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்..!!

நாடு முழுவதும் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது: முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments