Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் நாளை போராட்டம் !

Advertiesment
வேளாண்  சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் நாளை  போராட்டம் !
, புதன், 17 பிப்ரவரி 2021 (20:42 IST)
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு கடந்தாண்டு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

சமீபத்தில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாக கூறியது.  ஆனால் இதை ஏற்காத விவசாயிகள் இந்த 3 வேளாண் சட்டங்கள் முழுமையாகத் தடைசெய்யப்படும்வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும், நாளை நண்பகல் 12 மணிமுதல் மாலை 4 மணிவரை நாடு முழுவதும் ரயில் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக பெண்ணுக்கு தூக்கு தண்டனை!