Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு - ராணுவ விசாரணைக்கு உத்தரவு?

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (14:04 IST)
நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல். 

 
நாகலாந்து மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர் என்பதும் இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் நாகலாந்து மாநிலத்தில் உள்ள மோன் என்ற நகரில் ஒரு சிலர் சந்தேகத்திற்கிடமாக இருந்த நிலையில் அவர்கள் பயங்கரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். 
 
ஆனால் துப்பாக்கி சூடு முடிந்த பிறகு பார்த்தபோது அவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் கொல்லப்பட்டதாகவும், ராணுவ வாகனங்கள் தீ வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. 
 
இதனிடையே நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேஜர் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments