Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய் கண்முன்னே பலியான 10 வயது மகள்: 4 மாடி கட்டிடம் விழுந்ததில் பரிதாபம்

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (07:59 IST)
மும்பையில் 4 மாடி கட்டடம் ஒன்றின் முன் பகுதி இடிந்து விழுந்ததில் தாய் கண் முன்னே பத்து வயது மகள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
 
மும்பையிலுள்ள கார் ஜிம்கானா என்ற பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தினேஷ், விதிஷா மற்றும் அவர்களது 10 வயது மகள் மோத்வானி ஆகியோர் நான்காவது மாடியில் கூடியிருந்தனர். இந்த நிலையில் மோத்வானிக்கு பள்ளியில் தேர்வு நடந்து கொண்டிருந்த நேரம் என்பதால் வழக்கமாக மூன்று மணிக்கு வரும் அவர் நேற்று முன்கூட்டியே 12.30 மணிக்கு வீட்டிற்கு வந்துவிட்டார். அவர் வீட்டின் முன்பகுதியில் உள்ள பால்கனியில் உட்கார்ந்து தொலைக்காட்சியில் கார்ட்டூன் டிவி பார்த்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென கட்டிடம் குலுங்குவதாக மோத்வானி தனது தாயாரிடம் கூறியுள்ளார் 
 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் உடனே மகளை இந்த பக்கம் வரும்படி கூறியுள்ளார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் மோத்வானி நின்று கொண்டிருந்த பால்கனி பகுதி திடீரென இடிந்து கீழே விழுந்தது. தாயார் விதிஷா நூலிழையில் உயிர் தப்பிய போதிலும் அவரது கண்முன்னே மோத்வானி பரிதாபமாக கீழே விழுந்து பலியானார் 
 
 
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் இந்த கட்டிடம் கட்டிய பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களிடம் கட்டிடம் எவ்வாறு இடிந்து விழுந்தது என்பது குறித்து விசாரணை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த அபார்ட்மெண்டில் 30 குடும்பங்கள் மொத்தம் வாழ்வதாகவும் இதில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments