Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் ஆணையத்தின் முன் போராடிய எம்பிக்கள் கைது!

தேர்தல் ஆணையத்தின் முன் போராடிய எம்பிக்கள் கைது!

Sinoj

, திங்கள், 8 ஏப்ரல் 2024 (19:33 IST)
நாடாளுமன்றத் தேர்தல் வரும்  ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் வரும் ஜூன் மாதம் 1 ஆம்தேதி வரை நடைபெறவுள்ளது.
 
 நாடு முழுவதும் தேர்தல் விதிகள் அமலில் உள்ளது. எனவே தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  சமீப காலமாக பல்வேறு ஊழல் வழக்குகளில்   முக்கிய அரசியல் தலைவர்கள்,  அமைச்சர்கள் உள்ளிட்ட சிலரை அமலாக்கத்துறை,ல் சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்பு கைது செய்து வருகின்றனர்.
 
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு கூறி வருகின்றன. இந்த நிலையில், அமலாக்கத்துறை, வரித்துறை, சிபிஐ, என்.ஐ.ஏ ஆகிய மத்திய விசாரனை அமைப்புகளின் இயக்குநர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 10 எம்பிக்கள் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.
 
தேர்தல் ஆணையர்களைச் சந்தித்து முறையிட்ட பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் குண்டுகட்டாக கைது செய்தனர் டெல்லி போலீஸார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக திட்டங்களை முடக்கிய திமுக..! இரட்டை வேடம் போடும் பாஜக...! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!